Song lyrics

Andhiyile Vaanam Lyrics

அந்தியிலே வானம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Mano, Swarnalatha
Lyricist
Gangai Amaran
Andhiyile Vaanam

Video

Andhiyile Vaanam

Lyrics

Andhiyile Vaanam Lyrics

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

கட்டமர தோணி போல கட்டழகன் உங்க மேல
சாஞ்சா சந்தோஷம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்

வெள்ளியல தாளந்தட்ட சொல்லியொரு மேளங்கோட்ட
வேளை வந்தாச்சு கண்ணம்மா
மல்லியப்பூ மாலை கட்ட மாரியிட வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து
தாளாம நூலானேன் ஆளான நான்தான்
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே வாரும் சுந்தரிய பாரும் சதிராட்டம் சொல்லிக் கொடுக்கும்
கூடும் காவிரி இவதான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people