Song lyrics

Gankai Aatril Lyrics

கங்கை ஆற்றில் பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
Ilaiyaraaja
Year
1983
Singers
P. Susheela
Lyricist
Gangai Amaran
Gankai Aatril

Lyrics

Gankai Aatril Lyrics

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் போலவே
வேஷம் மெய் போட்டது
அந்த மெய்யே
பொய்யாய்க் கொண்டாள்
ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்
அவை எல்லாம் வேஷம் என்றாள்

பெண் : தன் கண் செய்த மாயம்
பெண்மேல் என்ன பாவம்
தன் நெஞ்சோடு தீராத சோகம்
இப்போராட்டம் எப்போது தீரும் இனி

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்

பெண் : பொய் மானையே
அன்று மெய் மான் என
அந்த சீதை பேதை ஆனாள்
மெய் மானையே
இன்று பொய் மானென
இந்த கோதை பேதை ஆனாள்

பெண் : பொய் நம்பிக்கை அங்கே
வீண் சந்தேகம் இங்கே
கண் ஒவ்வொன்றும்
வெவ்வேறு பார்வை
என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னையே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது

பெண் : கங்கை ஆற்றில்
நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people