Song lyrics

Achchacho Punnagai Lyrics

அச்சச்சோ புன்னகை பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Mani Sharma
Year
2001
Singers
Udit Narayan
Lyricist
Vairamuthu
Achchacho Punnagai

Lyrics

Achchacho Punnagai Lyrics

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்

அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல் முந்தானை எந்திக்கொண்டேன்

உன் புன்னகை  ஹொ ஹொ
எனும் சாவியால்  ஹொ ஹொ
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்

வார்தையில் காதலை சொன்னாய் என் வாலிபம் மெலிந்ததடி
உன்னை கலந்தபின் நான் சென்று குளித்தால் கடல் குடிநீர் ஆகுமடி

கவிதை இது கவிதை இன்னும் கற்பனை செய்வோமா
உயிரை இடம் மாற்றி நம் உதடுகள் சேர்ப்போமா

ஆம்மம்மா நுனி விரல் தொட்டே என் இதயம் பதரியதே
ஆழங்கள் தொட என்னாகும் என் உயிரே சிதரியதே

நீ தீண்டினால்  ஹொ ஹொ
உயிர் தூண்டினால்  ஹொ ஹொ
நீ தீண்டினால் உயிர் தூண்டினால் நெஞ்சில் போக்ரான் வெடிக்கிரதே

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்

பெண்ணுக்குள் இத்தனை சுகமா அந்த ப்ரம்மனின் திறம் வாழ்க
எனக்குள் தூங்கிய சுகத்தை இன்று எழுப்பிய விரல் வாழ்க

ஆடியே சுக வகையே இன்னும் ஆயிரம் கோடியடி
கண்ணே கொஞ்சம் வளைந்தால் என் கற்பனை நீளுமடி

வெட்கத்தை உன் முத்தத்தால் நீ சலவை செய்துவிடு
பெண் தேகம் ஒரு பேரேடு உன் பெயரை எழுதிவிடு

இரு உதடுகள்  ஹொ ஹொ
என் எழுதுகோல்  ஹொ ஹொ
இரு உதடுகள் என் எழுதுகோல் வா அன்பே வளைந்துகொடு

அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கைகுட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்துக்கொண்டேன்

அச்சச்சோ புன்னகை அத்திப்பூ புன்னகை
சிந்தாமல் சிதறாமல் முந்தானை எந்திக்கொண்டேன்

உன் புன்னகை  ஹொ ஹொ
எனும் சாவியால்  ஹொ ஹொ
உன் புன்னகை எனும் சாவியால் என் காதல் திறந்துகொண்டேன்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people