Song lyrics

Mana malare Kani rasame Lyrics

மண மலரே கனிரசமே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. M. Subbaiah Naidu
Year
1959
Singers
P. Susheela
Mana malare Kani rasame

Lyrics

Mana malare Kani rasame Lyrics

மண மலரே கனிரசமே
மாசில்லாத தங்கமே
வளரும் சந்திர பிம்பமே
மண மலரே கனிரசமே.....

கனி வாயிதழின் புன்னகையால்
மனதைக் கவரும் கிளியே – கலை
அழகு தவழும் சிலையே – உனை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)

பழமும் பாலும் ஊட்டி உன்னை
பள்ளிக்கூடம் அனுப்புவேன்
படித்து நீயும் அரிய பெரிய
பட்டம் வாங்கித் திரும்புவாய் – அதை
எண்ணி உள்ளம் மகிழுதடா
எனது அன்பின் வெள்ளமே
இனிக்கும் மழலைச் செல்வமே...(மணமலரே)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people