Song lyrics

Thenmadurai Vaigai Nadhi Lyrics

தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1988
Singers
Malaysia Vasudevan, P. Susheela, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Thenmadurai Vaigai Nadhi

Video

Thenmadurai Vaigai Nadhi

Lyrics

Thenmadurai Vaigai Nadhi Lyrics

(இசை)
ஆண்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தேய்கின்றது
(இசை)
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா
இது வானம் போலே வாழும் பாசம்

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)

நம்மை போல நெஞ்சம் கொண்ட
அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை என்னும்
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம் தானே
அண்ணன் என்றும் வாழும் எல்லை
ஒன்றாய் காணும் வானம் என்றும்
ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடு தான் உன் வண்ணம்
நெஞ்சோடு தான் உன் எண்ணம்
முன்னேறு நீ மென்மேலும்
என் ஆசைகள் கை கூடும்

இந்த நேசம் பாசம்
நாலும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
(இசை)

நெஞ்சில் என்னை நாளும் வைத்து
கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று
மஞ்சள் மாலை மேளம் யாவும்
கண்ணில் காணும் காலம் உண்டு

பூவைச் சூடி பொட்டும் வைக்க
மாமன் உண்டு மானே மானே
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட
கள்வன் இங்கு நானே நானே

உன்னோடு தான் என் ஜீவன்
ஒன்றாக்கினான் நம் தேவன்
நீ தானம்மா என் தாரம்
மாறாதம்மா என் நாளும்

இந்த நேசம் பாசம்
நாளும் வாழ்க

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு

பெண்: தேய்கின்றது பொன் மாலை நிலா
தேய்கின்றது பொன் மாலை நிலா
தேயாதது நம் ஆசை நிலா

ஆண்: இது வானம் போலே வாழும் பாசம்

ஆண் பெண் இருவரும்:
தென்மதுரை வைகை நதி
தினம் பாடும் தமிழ் பாட்டு
தென்மதுரை வைகை நதி
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people