Song lyrics

Nila Nee Vaa Vizha Lyrics

நிலா நீ வா விழா காண பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
R. Ramanujam
Year
1986
Singers
S. P. Balasubramaniam, S. P. Sailaja
Lyricist
Muthulingam

Lyrics

Nila Nee Vaa Vizha Lyrics

நிலா நீ வா விழா காண வா வா
நிலா நீ வா விழா காண வா வா
நிலா நீ வா விழா காண வா வா

காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை

இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை

கண்ணாலே சங்கீதம் தினம் பாடு
தன்னாலே உண்டாகும் சுகம் நூறு
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

நிலா நீ வா...விழா காண வா வா
நிலா நீ வா...விழா காண வா வா

ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்

மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்

உன்னாசை பொன்னோடம் நான்தான்
உன் பார்வை எந்நாளும் தேன்தான்
நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே....

நிலா நீ வா...விழா காண வா
நிலா நீ வா...விழா காண வா

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people