அன்பாளனே பாடல் வரிகள்

Last Updated: Jan 23, 2025

Movie Name
Lal Salaam (2024) (லால் சலாம்)
Music
A. R. Rahman
Year
2024
Singers
Deva
Lyrics
Yugabharathi
எல்லாமும் இங்கே

அல்லாவும் நானே ஆகும்

பொல்லாத காலம்

கண்ணீரில் கோலம் போடும்

ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே

ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே

தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே

ஓஓ… ஓஓ…

வல்லோனே நான் உன்னை காண்பேனோ

துன்பத்திலே சொல் சொல் சொல்

அன்பாளனே சொல் அருளாளனே சொல்

அன்பாளனே சொல் சொல் சொல்

அன்பாளனே சொல் அருளாளனே சொல்

அன்பாளனே சொல் சொல் சொல்

எல்லாமும் இங்கே

அல்லாவும் நானே ஆகும்

பொல்லாத காலம்

கண்ணீரில் கோலம் போடும்

ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே

ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே

தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே

ஓஓஓ…. ஓஓஓ…

நல்லோருக்கு ஓர் தீங்கு செய்தேனில்லை

நம்பிக்கை துரோகத்தை சேர்ந்தேனில்லை

ஆனாலும் அல்லா நீ ஏன் என் மேல் கோபம் கொண்டாய்

ஓஓஓ…. ஓஓஓ…

பொய்வேடம் நான் என்றும் இட்டேன் இல்லை

இல்லாரின் கைக்காசை தொட்டேன் இல்லை

ஆனாலும் அல்லா நீ ஏன் என்னை தீயாய் சுட்டாய்

ஓஓஓ…. ஓஓஓ…

சேதாரம் ஆனாலும் அல்லாஹ் உன்

அன்பாலே தீரும் துயர் யாவும்

ஆதாரம் நீ ஆனால் எல்லாமே

கை சேர பாரம் பறந்தோடும்

எல்லாமும் இங்கே

அல்லாஹ் உன்னாலே ஆகும்

ஓடை இல்லாமல் போகின்ற ஓடத்திலே

ஓய்ந்தேனே ஓயாத சோகத்திலே

தீயில் பஞ்சாகி வேகின்ற நேரத்திலே

ஓஓஓ…. ஓஓஓ…

முன்னேறி முன்னாலே வந்தோர் உண்டு

முள் மீதே கால் வைத்து சென்றோர் உண்டு

என்றாலும் அல்லாஹ்

உன் அன்பின்றி வெல்வார் உண்டோ

ஓஓஓ….

தன் போக்கில் எங்கேயும் செல்வர் உண்டு

தள்ளாடி பின்னாலே நின்றார் உண்டு

என்றாலும் அல்லாஹ்

உன் கண் இன்றி காண்பார் உண்டோ

ஓஓஓ….

ஆகாயமானாலும் அல்லாஹ் நீ இல்லாமல்

தூரல் கிடையாதே

பூலோகம் ஆனாலும் அல்லாஹ்

உன் சொல்லின்றி பூவும் மலராதே

எல்லாமும் இங்கே அல்லாஹ்வும் நானே ஆகும்

ஈடுயில்லா உன்னை சொன்னாலே இன்பம் கூடும்

இதன் உன் பார்வை செய்கின்ற மாயத்திலே

எங்கேயும் தோன்றாதோ தீபங்களே

தாயும் நீயாகி கை தாங்கும் நேரத்திலே

ஓஓஓ…

நோய் ஏது நொடி ஏது

நீ இன்றி உயிர் ஏது

சொல் சொல் சொல்

அன்பாளனே சொல் அருளாளனே சொல்

அன்பாளனே சொல் சொல் சொல்

அன்பாளனே சொல் அருளாளனே சொல்

அன்பாளனே சொல் சொல் சொல்

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.