ஏ புள்ள பாடல் வரிகள்

Last Updated: Dec 23, 2024

Movie Name
Lal Salaam (2024) (லால் சலாம்)
Music
A. R. Rahman
Year
2024
Singers
Sid Sriram
Lyrics
Kabilan
அடி பச்சரிசி பல்லுக்காரி
பட்டினிக்குப் பந்தி வைக்க
மச்சமெல்லாம் மின்னுதடி
நட்சத்திரமா

அட தண்ணீர்ல மீனு ஒன்னு
தக திமி தா
நெஞ்சுக்குளி பள்ளத்துல
வந்து குதிச்சா

ஏய் சித்தாட கட்டி வந்த
சிங்காரமே ஹே சிங்காரமே
ஹே சிங்காரமே
மண் பானை உடையாத மந்திரமே
சீம்பாலில் செஞ்சு வச்ச சித்திரமே
அடி எம்மே

ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

முனகல் …..

மந்திரிச்ச மயிலே
கரும்பில் செய்த குழலே
நெஞ்சில் வாழும் நிழலே

ஆட ஆட பாலாட
ஆட்டம் போடும் நூலாட
உன் வாசல் பூன நானாடி
வாழைமீனு நீயடி

மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
மோன மோன முந்தான
மோகம் கொண்டு வந்தான
பூட்டிவை பொத்தான
ஆசை தீர அத்தான

ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

பள்ளிக்கூடம் முடிஞ்சா
வீட்டு பாடம் இருக்கு
என்ன வேணும் உனக்கு….

ஆரம் ஆரம் சஞ்சாரம்
அசர வேணும் பஞ்சாரம்
அடி கண்ணே என்ன யோசன
கண்ணில் காதல் வாசன

காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
காட்டு மல்லி கையோடு
கட்டி போட்ட மெய்யோடு
ஒன்னுக்குள்ள ஒன்னோடு
வேரும் போகும் மண்ணோடு

ஏ புள்ள கக்களத்தி
நீ என்பகத்தி செம்பகத்தி
மண்மகத்தி
ஏ புள்ள என்ன சுத்தி
மண்ண சுத்தி விண்ண சுத்தி
உன்ன சுத்தி

ஏ புள்ள வெண்ணிலவின் விதையே
வேட்டிச் சேலை விடுகதையே
ஆளான மழையே
பூவா வீசுகின்ற
புயலே வா வா

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.