Song lyrics

Sangathil Padatha Kavithai Lyrics

சங்கத்தில் பாடாத கவிதை பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Shankar-Ganesh
Year
1982
Singers
Ilaiyaraaja, S. Janaki
Lyricist
Pulamaipithan
Sangathil Padatha Kavithai

Video

Sangathil Padatha Kavithai

Lyrics

Sangathil Padatha Kavithai Lyrics

ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர

ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
பெண் : ஆஆஅ… ஆஅ… ஆ…
ஆண் : கால் என்றே செவ்வாழை இணைகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்… பொய் கொஞ்சம்…
பெண் : ஆஆ… ஆ…
ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர

ஆண் : அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
பெண் : அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில் சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா… கொஞ்சம் தா…
பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர

ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது
பெண் : ஆஅ… ஆஅ…
ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டு… மெய் தொட்டு…
ஆண் : காமத்தில் தூங்காத விழியும் சந்தித்தேன் என்னென்ன மாயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது

பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது
ஆண் & பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people