Song lyrics

Nandri Unakku Lyrics

நன்றி உனக்கு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Malaysia Vasudevan
Lyricist
Vaali
Nandri Unakku

Video

Nandri Unakku

Lyrics

Nandri Unakku Lyrics

பல்லவி:
நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே

நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே

சரணம் 1:
அடிச்சு பிடிச்சு கிடந்த ஊருக்குள்ளே
நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே
உமையவளே...
மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி
உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி
நிகழுமடி...
நல்லோர்க்கு தீங்கு இழைச்சா காப்பவள் நீயே
பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே
கோடானு கோடியிலே நானும் உன் சேயே
கை பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே

குழு:
வேப்பிலையில் ஆடை கட்டி வீற்றிருக்கும் அம்பிகையே
முக்கோணத்தில் உட்கார்ந்திடும் மகமாயி

பல்லவி:
நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே

சரணம் 2:
படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்
கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும் நிழல் கொடுக்கும்
நிழல் கொடுக்கும்...
அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்
உந்தன் அடியை பணிந்தே வணங்கி உலகிருக்கும்
உலகிருக்கும்...
பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி
அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி
கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி
கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி

குழு:
காலம் வந்தால் கண் திறப்பாய் தீயவரை நீ எரிப்பாய்
ஆங்காரியே ஓங்காரியே மாகாளி

பல்லவி:
நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே
நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே
மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே
மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே
தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே
சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people