Song lyrics

Konjum Pura Lyrics

கொஞ்சும் புறா இந்த கோடை நிலா பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
Ilaiyaraaja
Year
1995
Singers
Mano, S. Janaki
Lyricist
Vaali
Konjum Pura

Lyrics

Konjum Pura Lyrics

பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண் : எண்ணிரண்டு வயதில் நான் ஏங்கிட
கண் இரண்டும் இமைகள் மூடுமா
நள்ளிரவில் எனது நூலாடையில்
பள்ளி கொள்ளும் தருணம் கூடுமா

ஆண் : ராதைப் பெண்ணே காதல் மன்னன்
போதைக்கேற்ற மாயக் கண்ணன்
ஜாலம் காட்டுவான்
பெண் : ஹஹஹாஹ்
ஆண் : ஆணிப் பொன்னின் அங்கம் எங்கும்
ஆசை வெள்ளம் பொங்கும் வண்ணம்
கோலம் தீட்டுவான்

பெண் : பறிக்கச் சொல்லுது
இந்த பவள மல்லிகை
வா வா அதிகாலையும் மாலையும்
வீசும் இதன் ஆனந்த வாசம்

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ
மீண்டும் பொன் மாலையில் மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : பெண்ணுக்குள்ளே அழகி நீ தான் என
கண்ணுக்குள்ளே மயக்கம் தோன்றுதே
அத்தி மரக் கனியும் நீ தான் என
கொத்தித் தின்ன இளமை தூண்டுதே

பெண் : ஆடை சுற்றும் கோயில் தெப்பம்
கூடச் சுற்ற கோடை வெப்பம் தீர்ந்து போகுமா
ஆளைத் தொட்டும் தோளைத் தொட்டும்
காளை கட்டும் காதல் மெட்டும் தேவ கானமா

ஆண் : கலைந்திடாமலே இந்த கானம் வாழுமே
நாளும் இள மாலையில் வாலிபம்
ஓதும் இந்த மன்மத வேதமே

பெண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

ஆண் : கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ

பெண் : மீண்டும் பொன் மாலையில்
மீட்டிட வேண்டும்
ஓர் மாணிக்க வீணை

ஆண் : கொஞ்சும் புறா இந்த கோடை நிலா
நெஞ்சில் கோலம் போட்டதோ

பெண் : கண்ணில் உலா வரும் காதல் கனா
உந்தன் கானம் கேட்டதோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people