Song lyrics

En Nenjile Vandhathae Lyrics

என் நெஞ்சிலே வந்ததே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vijay Anand
Year
1989
Singers
Mano, S. Janaki
Lyricist
Muthulingam
En Nenjile Vandhathae

Lyrics

En Nenjile Vandhathae Lyrics

ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களின் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே....

பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களின் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே....

ஆண் : ஹே மல்லிகை அருகினில் வா என்றது
பெண் : நீ வந்ததும் மனமிது ஏன் துள்ளுது
ஆண் : ஹோ மோகம் உனை முத்தாடுது
தேகம் துணை கேட்டாடுது

பெண் : கண்ணா இதை யார் சொன்னது
எந்தன் மனம் யார் கண்டது
ஆண் : பூங்கொடியை தென்றல் அறியும்
என் மனது உன்னை அறியும்

பெண் : போதும் விளக்கம் அது புரியும் எனக்கும்
ஆண் : ஹேய் வாழும் வரைக்கும்
அதில் ஆசையிருக்கும்
தேவியே பாடவா மோக ராகம்

பெண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
ஆண் : உன் கண்களின் சம்மதம் கேட்டு
பெண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
ஆண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
பெண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே....

பெண் : பொன் மாளிகை அழகினை பார் என்றது
ஆண் : பொன் வீதியில் மன்மதன் தேர் வந்தது
பெண் : ரோஜா மலர் செண்டாடுது ராஜா மனம் பந்தாடுது
ஆண் : வஞ்சிக் கொடி நின்றாடுது தஞ்சமென மன்றாடுது

பெண் : பூவெடுத்து மாலை தொடுக்க
நீ வரலாம் தேதி குறிக்க
ஆண் : தொட்டுப் பிடிப்போம்
புது சொர்க்கம் அமைப்போம்

பெண் : சோலைக் குயில் போல்
வனம் சுற்றிக் கிடப்போம்
தேவனே பாடவா மோக ராகம்

ஆண் : என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
பெண் : உன் கண்களின் சம்மதம் கேட்டு
ஆண் : நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
பெண் : வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
ஆண் : மொட்டுக்கள் திறக்கட்டுமே....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people