Lyrics
Adhairiyam Kolvadhu Ariveenam Lyrics
அதைர்யம் கொள்வது அறிவீனம்
தைர்யமே பிரதானம்
நதி மீதில் படகு போவது போலே
வாழ்க்கையிலே முன் செல்லுவோம்
ஹஹஹஹா பிராவகம் போலே
ப்ரேமையினாலே பாரினில் இன்பம் காண்போம்
ஈருடல் இரு கரை நாமிரு பேரும்
ஒருயிராகவே அன்பின் உறவிடமாக வாழ்வோம்...
ஹஹஹஹா வானில் மேவும் வெண்ணிலாவின்
வளரும் பிறையே போலே
எண்ணிடும் இளமை தென்றலாலே
இனிமை பரவும் ப்ரேமை
இதமாய் என்றும் வாழ்வோம்......(அதைர்யம்)
ஓஓ...ஒளியும் விழியும் போலே இருவரும் ஓஒ..
ஒன்றென உண்மையாகவே
உலகின் தோழமை நேசத்தாலே
ஆதரவோடு வாழுவோமே
ஆனந்தமே கொண்டாடுவோமே.......
மெய்யுடைய காதல் மேவும் ஓடை
மிதக்கும் ஓடமே வாழ்க்கை
மேலுயர் மார்க்கம் காண்போம்
ப்ராவகம் போலே ப்ரேமையினாலே
பாரினில் இன்பம் காண்போம்.....! (அதைர்யம்)
People
Related People
4 people