Song lyrics

Chinna Poongili Lyrics

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Chinna Poongili

Lyrics

Chinna Poongili Lyrics

சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி
இனிக்கும் நன்நாள் இது
வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி
இணையும் பொன் நாள் இது

சோலையோ நடுச் சாலையோ
தேடினேன் உனையே
காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன்
இதயம் இனியும் சரணம்......(சின்ன)

ஆசை தீர பேச வேண்டும் பூங்காவிலே
ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே
உன்னைச் சேர ஏங்கும் மாது
எல்லைக் கோட்டை தாண்டாதா
தென்றல் காற்றை தீண்டச் சொல்லி
தென்னங்கீற்று வேண்டாதா

வேண்டினால் விரல் தீண்டுமே
தீண்டினால் சுகம் தோன்றுமே
தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ
இதயம் இனியும் சரணம்...(சின்ன)

காலை மாலை கேட்பதுந்தன் ஆலாபனம்
காலம் தோறும் காண்பதுந்தன் ஆராதனம்
உன்னைத் தீண்டும் கைகள்
வேறு பெண்ணைத் தீண்டி வாழாது
சங்கப் பாடல் என்றும் இங்கே
சந்தம் நீங்கிப் போகாது

காதலே ஒரு காவியம்
நீண்ட நாள் நிற்கும் ஓவியம்
கண்மணி என்னைக் கூட வா நாள் எல்லாம்
இதயம் இனியும் சரணம்,......(சின்ன)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people