Song lyrics

Kanna Un Kannil Lyrics

கண்ணா உன் கண்ணில் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
Swarnalatha
Lyricist
Piraisoodan
Kanna Un Kannil

Video

Kanna Un Kannil

Lyrics

Kanna Un Kannil Lyrics

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : நிழலாக நீ காணும் கானல் நீர்
நிஜமாக உன் தாகம் தீர்க்காது
நினைவாலே எனை எண்ணி வாழ்ந்தாலும்
அது என்றும் நிஜ வாழ்க்கை ஆகாது

பெண் : உன் வேதனை பார்க்கின்றதே
உயிர் ஓவியம் கேட்கின்றதே
புண்ணாக உன் நெஞ்சம் ஆவதேன்
பொன்னான காலங்கள் போவதேன்

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே

பெண் : ஹோ ஓ ஹோ

பெண் : தினம் தீண்டும் பூந்தென்றல் காற்றோடு
உனைத் தீண்ட வருவேனே மண் மீது
உன் கைகள் தொடுகின்ற பொருள் எல்லாம்
உன் தேகம் படுகின்ற இடம் எல்லாம்

பெண் : உனைச் சேரவே தவிக்கின்றதே
ஒரு பெண் மயில் துடிக்கின்றதே
நீ வேறு நான் வேறு இல்லையே
அவன் வேறு நான் வேறு இல்லையே

பெண் : கண்ணா உன் கண்ணில் கண்ணீரோ
பொன்னான உன் நெஞ்சில் யாரோ
உன் தீராத சோகம் இனி வாராது ஓடும்
உன்னை நீங்காத நெஞ்சம் நானே
இது நான் சொல்லும் உண்மைதானே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people