Song lyrics

Sokkanukku Vaacha Lyrics

சொக்கனுக்கு வாய்த்த பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist
Piraisoodan
Sokkanukku Vaacha

Video

Sokkanukku Vaacha

Lyrics

Sokkanukku Vaacha Lyrics

பெண்: ச.. ரிகமச.. பமபக....
ரி.. தபதம... பதரிக....
சரிகமதப கமபதப நிரிசக...
நி ச ரி நி. த ச நி த. ப த நி ப. ம ப த ம க ரி ச.
அ...அ...அ...அ......

ஆண்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

பெண்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஹோ

ஆண்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே

சரணம் 1:
பெண்: ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம் இன்றி நீதான் பறிக்க
ஆண்: ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார்தான் தடுக்க
பெண்: பாவை நான் எனது பார்வை மேல் உனது பேர்தான் வரைய
ஆண்: நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர்தான் அறிய
பெண்: பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
ஆண்: நேசம் பாசம் நிறம் மாறிடுமோ ஓஹோ

ஆண்: சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
பெண்: சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியோ

சரணம் 2:
பெண்: மீண்டும் மீண்டும் விரல் தீண்ட தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
ஆண்: வாரி வாரி ஒரு வள்ளல் போல தர ஏன் ஏன் தயக்கம்
பெண்: மோகம் நீ வளர்க்க மேனிதான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆண்: ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
பெண்: வேகம் வேகம் இந்த வாலிபமே
ஆண்: வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே
பெண்: ஓ... ஓ... ஓ... சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
ஆண்: சொக்கப்பொன்னில் வார்த்த பைங்கிளியே
பெண்: சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
ஆண்: சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

ஆண்/பெண்: அ...அ...அ... அ...அ...அ. அ...அ...அ.. அ...அ...அ.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people