Song lyrics

Maadi Veettu Koondukili Lyrics

மாடி வீட்டு கூண்டுக்கிளி பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Idhaya Chandran
Maadi Veettu Koondukili

Lyrics

Maadi Veettu Koondukili Lyrics

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே
மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே
தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே
மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

கத்துக் கொள்ளும்போது துன்பம் இருக்கும்
துன்பங்களில் நூறு இன்பம் இருக்கும்
மெல்ல மெல்ல நாணம் ஓடி ஒளியும்
பின்னிக் கொள்ள தேகம் தேடி அலையும்

வேர்வையின் சங்கீதம் இன்று ஆனந்த ஆரம்பம்
பெண்ணுடல் எங்கெங்கும் இந்த மன்மதன் ராஜாங்கம்
அணைக்கும்போது எரியும் நெருப்பு
அணைக்க அணைக்க அணைய மறுக்கும்

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

பச்சைக்கிளி மெல்ல பந்தி விரிக்கும்
மிச்சமின்றி தேனை அள்ளிக் கொடுக்கும்
இச்சக்கிளி கைகள் எங்கும் நடக்கும்
மச்சங்களை தேடிக் கண்டு பிடிக்கும்

மெத்தையின் வித்தைகளில் புது கட்டிலும் திண்டாடும்
சங்கம சண்டைகளில் அவள் கைவளை துண்டாகும்
விடியும் நேரம் மலரும்போது
உடையை தேடி விழிகள் ஓடும்

மாடி வீட்டு கூண்டுக்கிளி ஏழை வீட்டு முற்றத்திலே
இறங்கி வந்து பாடுதம்மா காதல் தந்த பித்தத்திலே

மாலையிட்ட ஜோடிக்கிளி மயக்கத்தோடு மஞ்சத்திலே
தாளம் போட துடிக்குதம்மா பெண் கிளியின் நெஞ்சத்திலே
ஆஆஆஹ்ஹ்ஹ....ஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ...ம்ம்ம்ம்ம்ம்.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people