Lyrics
Kai Valavi Kulunga Lyrics
கை வளவி குலுங்க தட்டுங்க
ஆலெலங்குமி ஆத்தாளுக்கு ஆடி தட்டுங்க
வட்டமிட்டு வளைஞ்சு தட்டுங்க
ஆலெலங்குமி அம்மனுக்கு பாடி தட்டுங்க
காத்தாடும் கரையோரம் காத்திருக்கும் காளியே
கடல் சூழ்ந்த எங்க மாரியே
தாழம்பூ கொண்டக்காரி
உன் மனசிறங்கி எங்க குறை தீர்க்க வேணுமே
கை வளவி குலுங்க தட்டுங்க
ஆலெலங்குமி ஆத்தாளுக்கு ஆடி தட்டுங்க
(ஆயேலேலேலே ஆயேலேலேலே...)
வட்ட பொட்டுக்காரி மரிக்கொழுந்து வாசக்காரி
அடங்காக் கோவக்காரி குணத்துல தான் ஆசக்காரி
குடிய செழிக்க வைப்பாளே
ஏ... குலத்த தழைக்க வைப்பாளே
நல்ல தலைவாழ எல விரிச்சு வகைவகையா படைப்போம்
அட கங்கானமும் காப்பும் கட்டி கும்மி போட்டு கழிப்போம்
அட உடுக்கையோட பம்ப சத்தம் கேட்டு இறங்குவா
அவ சப்பரத்துல ஒய்யாரமா பவனிக் காணுவா
கடல் காக்கும் காளியே வினை தீர்க்கும் மாரியே
உன் பாதத்துல இறக்கி வச்சோம் எங்க பாரத்த
வினை தீர்த்து வச்சு பார்த்துகடி இந்த கூட்டத்த
(தன்னே நன்னே தானே நன்னானே...)
வானா இடி முழங்க மாரி மழை மண் நனைக்க
உப்பு காத்து அடிக்க வந்த எல்லா காத்து நிக்க
பூமி செழிக்க வேணுமே
ஏ... சனமும் சிறக்க வேணுமே
அந்த கருங்கடலும் செங்கடலும் ஆளுகின்ற ஆத்தா
அவ பக்குவமா பக்கம் நின்னு எங்க ஊர காப்பா

People
Related People
7 people