Song lyrics

Intha Maamanoda Manasu Lyrics

இந்த மாமனோட மனசு பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
S. P. Balasubrahmanyam, S. Janaki
Lyricist
Vaali
Intha Maamanoda Manasu

Video

Intha Maamanoda Manasu

Lyrics

Intha Maamanoda Manasu Lyrics

பெண் : இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பெண் : குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொ௫ கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல

பெண் : மாமனோட
ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

ஆண் : அக்காளும் மகளுக்குக் கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்போ அல்லாடி கெடக்கிற ஆசைய நான் முடிப்பேன்
பெண் : விரும்பியது இந்நேரம் கிடைக்கிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
ஆண் : எல்லோர்க்கும் நினைத்தது போலே
மண வாழ்க்கை வாய்த்திடாது
பெண் : எப்போதும் ஒருவனை எண்ணித் தவித்தேன்
ஆண் : இப்போது நான் அதைக் கண்டுபிடித்தேன்
பெண் : கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட

பெண் : மாமனோட
ஆண் : இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
ஆண் : குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொ௫ கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல

ஆண் : மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது

பெண் : பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவறையில் கண்ணாலே உனக்கொரு நன்றியை நான் உரைப்பேன்
ஆண் : எனக்கு அன்று சொல்லாத உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈராகும்
பெண் : கல்யாண கனவுகள் யாவும்
கையில் சேரும் நேரம் ஆகும்
ஆண் : பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
பெண் : வண்டாட்டம் பறந்திடும் வஞ்சி மனதும்
ஆண் : மஞ்சத் தாலி மார்பினில் ஊஞ்சலாட

ஆண் : மாமனோட
பெண் : ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
ஆண் : இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
பெண் : குத்தாலக் குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொ௫ கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்ல

பெண் : மாமனோட
இந்த மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூச்சூடுது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people