Song lyrics

A Aa Ee Solli Tharudhae Lyrics

இல்லா லைஹி லைஹி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vijay Antony
Year
2009
Singers
Rahul Nambiar, Dinesh
Lyricist
Eknaath
A Aa Ee Solli Tharudhae

Lyrics

A Aa Ee Solli Tharudhae Lyrics

குழு : இல்லா லைஹி லைஹி
லா இல்லா லைஹி லைஹி
சிம் சுகுங் கு சும் சும்
சிம் சுகுங் கு சும் சும் சிம்

ஆண் : அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்ல தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டி கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்

ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்...வானம்
அதில் பட்டாம்பூச்சியின் உருவம்....உருவம்
தீட்டிச் சென்றது மேகம்....மேகம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

லலல லைலை லைலோ
லலல லைலை லைலோ லலல

பெண் : க ம ப நி ச ரி ச ரி ச ரி ச ரி கமபநி
க ரி ச ரி ப த னி ப க ம க ம ரி க ரி க ச...

ஆண் : ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம்
எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்
ஊருக்கே உண்டான தனிப்பாசம்
எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்

பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின்
ருசியை வெல்லும் உணவில்லை
தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே
உலக அழகியும் இணையில்லை

சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்
வயிறு நிறையாது நண்பா
நெல்மணிக்கு பதிலாக தங்கத்தை
நாமும்தான் தின்ன முடியாது நண்பா ஆஆஆ

அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்....வானம்
அதில் பட்டாம் பூச்சியின் உருவம்....உருவம்
தீட்டிச் சென்றது மேகம்....மேகம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

காலையில் கண் விழிக்கும் சூரியனும்
பனியில் முகம் துடைத்தே தலை சீவும்
புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில்
மழைத்துளி கை கோர்த்தே நடைபோடும்

கள்ளம் கபடம் இல்லா மனதில்
சோகம் தங்க முடியாதே
சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே
சுகமும் இங்கு கிடையாதே

ஒவ்வொரு நொடிகளும் நமக்காய் பிறந்தது
முழுசாய் அனுபவி நண்பா
நம் எதிரி எதிரிலே வந்து நின்றாலும்
அன்பு காட்டுவோம் நண்பா ஆஆ

அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில்
பட்டாம்பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்

நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்ல தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டி கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்

ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம் அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அ ஆ இ ஈ சொல்லி தருதே வானம்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people