Song lyrics

Adi Vaanmathi Lyrics

அடி வான்மதி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1989
Singers
S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Lyricist
Pulamaipithan
Adi Vaanmathi

Video

Adi Vaanmathi

Lyrics

Adi Vaanmathi Lyrics

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
அடி பார்வதி என் பார்வதி

பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே கேட்காதா
அடி வான்மதி என் பார்வதி

சின்ன ரோஜா இதழ் அது கன்னம் நான் என்றது
பாடும் புல்லாங்குழல் உன் பாஷை நான் என்று கூறும்
கூந்தல் அல்ல தொங்கும் தோட்டம்
தோளில் சாய்ந்தால் ஊஞ்சல் ஆட்டும்
தேன் தர வேண்டும் நீ வர வேண்டும்
கண் வாசல் பார்த்தாடு வா...

ஒரு வான்மதி உன் பார்வதி
காதலி என்னை காதலி
தேவன் எந்தன் தேவதாஸை காண ஏங்கினேன்
என் தேவதாஸ் என் தேவதாஸ்

பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னை பார்த்தேனே
ஒரு வான்மதி உன் பார்வதி

கோடை காலங்களில் குளிர் காற்று நீ ஆகிறாய்
வாடை நேரங்களில் ஒரு போர்வை நீ ஆக வந்தாய்
கண்கள் நாளும் பேசும் நேரம்
நானும் நீயும் ஊமை ஆனோம்
மை விழி ஆசை கை வளை ஓசை
ஏன் என்று நான் சொல்லவா...

அடி வான்மதி என் பார்வதி
காதலி கண் பாரடி
தேடி வந்த தேவதாஸை காண ஓடி வா
என் தேவதாஸ் என் தேவதாஸ்

பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே
பாரு நானும் உன்னை பார்த்தேனே
அடி வான்மதி என் பார்வதி
தேவதாஸ் என் தேவதாஸ்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people