Song lyrics

Rassikathane intha Lyrics

ரசிக்கத் தானே இந்த பாடல் வரிகள்

Last updated Jul 14, 2026

Music
M. S. Viswanathan
Year
1966
Singers
P. Susheela
Lyricist
Kannadasan
Rassikathane intha

Lyrics

Rassikathane intha Lyrics

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு
பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம்
பழகிப் பார்த்த பின்னே விலகு
பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம்
பழகிப் பார்த்த பின்னே விலகு

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு

தங்கமுல்லை தடைகளில்லை
தளதளக்கும் மலருக்குத் துணையில்லை
பள்ளியறையில் இன்று வரையில்
பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை
கலகலக்கும் இரவுக்கு உறவில்லை

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு

ஓடமின்னும் ஓடவில்லை
ஒருவருக்கும் இடமும் தரவில்லை
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை
ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை

ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம்
ரசனையோடு வந்து பழகு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people