Song lyrics

Naadu athai Naadu Lyrics

நாடு அதை நாடு பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
M. S. Viswanathan
Year
1966
Singers
P. Susheela, T. M. Soundararajan
Lyricist
Kannadasan
Naadu athai Naadu

Lyrics

Naadu athai Naadu Lyrics

நாடு நாடு அதை நாடு அதை நாடு ஆஹாஹா
அதை நாடாவிட்டால் ஏது வீடு? ஓஹோஹோ
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?

நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
நாடு நாடு அதை நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால் ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு

பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைக்கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?

வானும் குலமாதர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?

ப*சியென்று வ*ருவோர்க்கு விருந்தாக* மாறும்
ப*கைவ*ர் முக*ம் பார்த்து புலியாக சீறும்
நில*த்தில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்

நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண்பாடு
நாடு அதை நாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு?
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people