Song lyrics

Sundari Kannal Oru Lyrics

சுந்தரி கண்ணால் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1991
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Sundari Kannal Oru

Video

Sundari Kannal Oru

Lyrics

Sundari Kannal Oru Lyrics

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

***

ஆண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...

{பெண்குழு : ஒவர்லாப் ஆ...ஆ...ஆ...ஆ....
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
ஓ...ஓ...ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆ...ஆ...}

பெண் : வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண் : ஆ...ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண் : தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண் : வானிலவை நீ கேளு கூறும் என் வேதனை

பெண் : எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண் : மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

***

ஆண்குழு : ஆ...ஆ...ஆ...ஆ...

{பெண்குழு: ஒவர்லாப் ஓ...ஓ...
ஆ...ஆ...ஆ...ஆ..
ஓ...ஓ... ஓ...ஓ...ஓ...ஓ...}

பெண் : சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண் : நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண் : சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண் : என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people