Lyrics
Vellai Thamarai Lyrics
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் (வெள்ளைத்)
வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்
செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர்
சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்...(வெள்ளைத்)
People
Related People
5 people