Song lyrics

Kovil Muluthum Kanden Lyrics

கோவில் முழுதுங் கண்டேன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Chittor V. Nagaiah
Year
1952
Singers
M. L. Vasanthakumari
Lyricist
Kavimani Desigavinayagam Pillai
Kovil Muluthum Kanden

Lyrics

Kovil Muluthum Kanden Lyrics

கோவில் முழுதுங் கண்டேன் – உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்
தேவாதி தேவனை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)

தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித்
தேரோடும் வீதி கண்டேன்
தேவாதி தேவானை யான் – எங்குந்
தேடியுங் கண்டிலேனே...(கோவில்)

உள்ளத்தில் உள்ளானடி – அது நீ
உணர வேண்டுமடி
உள்ளத்தில் காண்பாயெனில் – கோயில்
உள்ளேயுங் காண்பாயடி.......

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people