Song lyrics

Maane Maragathame Lyrics

மானே மரகதமே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1993
Singers
Mano, S. Janaki
Lyricist
Pulamaipithan
Maane Maragathame

Video

Maane Maragathame

Lyrics

Maane Maragathame Lyrics

ஆண் : மானே மரகதமே
மானே மரகதமே
மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்

ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளை தான்

ஆண் : நேசம் வெச்சு நெஞ்சில் வெச்ச
பூச்செடி நீயடி
பெண் : பூவும் வெச்சு பொட்டும் வெச்ச
பைங்கிளி உன் மடி
ஆண் : பாசம் வெச்சு பாடும் பாட்டை
கேளடி என் கண்மணி
பெண் : உள்ளம் என்னும் வீட்டிலே
ஒட்டி வெச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே
அச்சடிச்ச காவியம்
ஆண் : மனசுக்குள் கோயில் கட்டி
மகராசி உன்ன வெச்சு
பொழுதானா பூச
பண்ணி வாழுறேன்

பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
ஆண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பெண் : பனி தூவும் மாலை வேளை தான்

ஆண் : மானே மரகதமே

பெண் : ராகம் வெச்சு புன்னை வன
பூங்குயில் கூவுது
ஆண் : மோகம் வெச்சு கன்னி உந்தன்
பேரைத் தான் கூறுது
பெண் : தேகம் ரெண்டும் கூடுகின்ற
நாளிது நன் நாளிது
ஆண் : நட்ட நடு ராத்திரி
சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில் தானடி
கண்கள் உன்னை காணுது
பெண் : அழகான தென்னஞ்சிட்டே
இனி மேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

ஆண் : மானே மரகதமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
பெண் : இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
ஆண் : பனி தூவும் மாலை வேளை தான்

பெண் : தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
ஆண் : தென்றல் தமிழ் பாடுது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people